தெலுங்கு வம்சாவளியாக பிறந்து, கோலிவுட்டில் கோலோச்சும் நடிகர், நடிகைகள்
கலை மற்றும் கலைஞர்களுக்கு, மொழி எல்லை என்பார்கள். அவர்கள் எந்த மொழி, எந்த நாட்டவரை சேர்ந்தவராக இருந்தாலும், ரசிகனுக்கு பிடித்தால், அந்த நடிகரை, 'நம்மூர்' காரனாகவே பாவிக்கும் எண்ணம், தமிழ்நாட்டின் ரசிகனுக்கு உண்டு. அந்த நடிகரும், தமிழ் மொழியின் உச்சரிப்பு, ஸ்லாங் மற்றும் கலாச்சாரங்களை பின்பற்றி, மண்ணின் மைந்தனாகவே மாறிவிடுவார்கள். அப்படி, தெலுங்கு-ஐ தாய் மொழியாக கொண்டு, கோலிவுட்டில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள தற்போதுள்ள சில நடிகர், நடிகைகளின் பட்டியல் இதோ: சமந்தா ரூத் பிரபு: முற்றிலும் தெலுங்கு வம்சாவளியாக அல்லாமல், தெலுங்கு-மலையாளம் என்று இருமொழி கலப்பில் பிறந்தவர் சமந்தா. கூடவே, சென்னையில் பிறந்து வளர்ந்ததால், 3 மொழிகளிலும் புலமை பெற்றதோடு, தற்போது பல மொழி திரைப்படங்களில் சாதித்தும் வருகிறார்.
விஷால் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை
விஷால்: விஷாலின் பூர்வீகம் ஆந்திரா என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். விஷாலின் இயற்பெயர் விஷால் ரெட்டி. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நடித்துவந்த விஷால், சமீபகாலமாக, தனது படங்களை இரு மொழிகளிலும் எடுத்துவருகிறார். எனினும், எப்போதும் தன்னை ஒரு தமிழர் என்றே கூறிக்கொள்வதுண்டு. பாபி சிம்ஹா: இவர் பிறந்தது அக்கட பூமியில் தான். படித்தது கூட தெலுங்கு மீடியம் தான். பள்ளி படிப்பு முடிந்ததும், குடும்பத்துடன் ஊட்டிக்கு வந்துவிட்டனர் என கூறப்படுகிறது. எனினும், நடிக்க முடிவெடுத்ததும் அவர் தேர்ந்தெடுத்தது தமிழ் சினிமாவை தான். ஐஸ்வர்யா ராஜேஷ்: இவரின் குடும்பத்தில் அனைவரும் ஆந்திரா சினிமாவில் பிரபல நடிகர்கள். ஐஸ்வர்யா மூன்றாம் தலைமுறை நடிகையாவார். இவர் பிறக்கும் முன்பே,இவரின் பெற்றோர்கள் சென்னையில் செட்டிலானதால், இவர் சென்னைவாசியாகவே தன்னை கூறிக்கொள்கிறார்.