கர்நாடகாவில் பிறந்து, தென்னிந்திய திரையுலகத்தை ஆளும் நடிகைகள்
கர்நாடகாவில் பிறந்து, எந்த ஒரு பின்புலனும் இன்றி, தற்போது, இந்திய சினிமாத்துறையில் ஆளுமை செலுத்தும், சில அழகிய, திறமையான நடிகைகளை பற்றி காண்போம்: அனுஷ்கா: பெங்களூரில், யோகா டீச்சராக இருந்தவர், 2005ஆம் ஆண்டு 'சூப்பர்' என்ற தெலுங்கு திரைப்படம் மூலம், திரையுலகில் கால் வைத்த அனுஷ்கா, தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 'பாகுபலி' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். பூஜா ஹெக்டே: இவரின் பூர்வீகம், கர்நாடகாவின் உடுப்பி ஆகும். மாடலிங் துறையில் பல விருதுகளை குவித்த பூஜா, தமிழில், 'முகமூடி' படத்தில் அறிமுகம் ஆனார். பின்னர், ஹிந்தி, தெலுங்கு என தனது கலைப்பயணத்தை விரிவுபடுத்தி, கடைசியாக, 'பீஸ்ட்' மூலம், தமிழுக்கு மீண்டும் வந்துள்ளார்.
வழக்கறிஞரிலிருந்து நடிகை ஆன ஷ்ரத்தா ஸ்ரீநாத்
ரஷ்மிகா மந்தனா: பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். கன்னட திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். பின்னர், தெலுங்கில் வெளியான 'கீதா கோவிந்தம்' மூலம் 'நேஷனல் க்ரஷ்' எனக்குறிப்பிடும் அளவிற்கு உயர்ந்தார். தற்போது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத்: பெங்களூரில் பிறந்த வழக்கறிஞர் இவர்.மாடலிங் துறையில் இருந்து, திரைத்துறைக்கு வந்தார். தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். நித்யா மேனன்: மலையாளியாக இருந்தாலும், இவர் பிறந்து வளர்ந்தது அனைத்தும், பெங்களூரு. தெலுங்கு, தமிழ், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும், தனது நடிப்பால் ஆளுமை செலுத்தும் நடிகை, நித்யா.