காதலர் எதிர்ப்பு வாரம்: காதலில் பிரேக்-அப் ஆன பிறகும், கேரியரில் கோலோச்சும் சில தென்னிந்த நடிகைகள்
இந்த காதலர் எதிர்ப்பு வாரத்தில், தங்கள் தனிப்பட்ட வாழக்கையில் சவால்களை சந்தித்த போதும், காதலில் பிரேக்-அப் ஆன பிறகும், அதிலிருந்து மீண்டு, திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய சில நடிகைகளின் பட்டியல் இதோ: நயன்தாரா: தற்போது, தனது நீண்டகால காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து மகிழ்ச்சியான வாழ்க்கையை துவங்கியுள்ள நயன்தாரா, இதற்கு முன்னர், இரண்டு காதல் முறிவுகளை சந்தித்துள்ளார். நடிகர் சிம்புவுடனான தனது முதல் காதல் முறிந்த பிறகு, பிரபுதேவாவுடன் காதல் கொண்டார். கிட்டத்தட்ட திருமணம் வரை சென்ற அந்த காதலும் முறிந்தது. அதன் பின்னர், தனது நடிப்புக்கும், கதைக்கும் முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். இன்று 'லேடி சூப்பர்ஸ்டார்' என ரசிகர்கள் கொண்டாடும் இடத்தில் உள்ளார்.
காதல் முறிவுக்கு பின்னரும் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கும் நடிகைகள்
திரிஷா: ஒரு தசாப்தத்திற்கும், மேலாக தமிழ், தெலுங்கு ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் திரிஷா, தெலுங்கு பட நடிகரான ராணாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. எனினும் சில காரணங்களால் பிரிந்த அவர், தொழிலதிபர், வருண் மணியனை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அதுவும் சில காரணங்களால் நின்றுபோனது. திரிஷா, அவற்றிலிருந்து மீண்டு, இப்போதுவரை முன்னணி நடிகையாக திகழ்கிறார். ரஷ்மிகா: 'நேஷனல் க்ரஷ்' என்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நடிகை ரஷ்மிகா. தெலுங்கில் 'கீதா கோவிந்தம்' என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். தன்னுடைய முதல் பட நாயகனான ரக்ஷித் ஷெட்டியை காதலித்த அவர், நிச்சயமும் செய்தார். ஆனால் இருவருக்கும் நடுவிலே நடைபெற்ற கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய நேர்ந்தது.