Page Loader
Kick Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் இரண்டாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்
Kick Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் இரண்டாம் நாள் இன்று

Kick Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் இரண்டாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 16, 2023
09:49 am

செய்தி முன்னோட்டம்

பிப்ரவரி 14, காதலர் தினத்திற்குப் பிறகு வரும் ஒரு வாரமும் மக்கள், காதலர் எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த வாரம், காதலில் தோல்வியுற்றவர்கள், சிங்கிள்கள், பிரிந்த காதலர்கள், தங்கள் கடந்த கால கசப்புகளை மறக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள். இது ஸ்லாப் டே(Slap day) தொடங்கி, பிப்ரவரி 21 அன்று பிரேக்அப் டேயுடன் முடிவடைகிறது. இடையில் கிக் டே(Kick day), பெர்ஃப்யூம் டே(Perfume day), ஃப்ளர்ட் டே(Flirt day) , கன்ஃபெஷன் டே (Confession day), மிஸ்ஸிங் டே(missing day) என்று கொண்டாடப்படுகிறது. இன்று பிப்ரவரி 16, கிக் டே(Kick day) என கொண்டாடுகிறார்கள்.

காதலர் தினம்

கிக் டேயின் முக்கியத்துவம்

கிக் டே அன்று, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தித்துள்ள எதிர்மறையான உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய ஒரு நாள். இந்த நாளில், உங்கள் முன்னாள் காதல், உங்கள் வாழ்க்கையில் அவர்கள் விட்டுச்சென்ற எதிர்மறையான நிகழ்வுகள் என அனைத்தையும் உதைத்து தள்ளுங்கள். உங்கள் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் பாதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் தூர எறிய வேண்டிய நாள். உங்கள் ex விட்டு சென்ற பரிசுகள், நினைவுகள், நீங்கள் கொண்டுள்ள கேட்ட பழக்கங்கள் என எல்லாவற்றையும் 'கிக்' செய்ய வேண்டிய நாள் இன்று. உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர இது உதவும்