Page Loader
Slap Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் முதல் நாள் இன்று; அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்
காதலர் எதிர்ப்பு வாரத்தின் முதல் நாள் இன்று

Slap Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் முதல் நாள் இன்று; அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 15, 2023
08:57 am

செய்தி முன்னோட்டம்

நேற்றுடன் காதலர் தினம் முடிந்த நிலையில், இன்று முதல், அடுத்த ஒரு வாரத்தை, காதலர் எதிர்ப்பு வாரமாக கொண்டாடுகிறார்கள். இந்த வாரம், காதலில் தோல்வியுற்றவர்கள், சிங்கிள்கள், பிரிந்த காதலர்கள், தங்கள் கடந்த கால கசப்புகளை மறக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள். இன்று, பிப்ரவரி 15 , ஸ்லாப் டே(Slap day) தொடங்கி, பிப்ரவரி 21 அன்று பிரேக்அப் டேயுடன் முடிவடைகிறது. இடையில் கிக் டே(Kick day), பெர்ஃப்யூம் டே(Perfume day), ஃப்ளர்ட் டே(Flirt day) , கன்ஃபெஷன் டே (Confession day), மிஸ்ஸிங் டே(missing day) என்று கொண்டாடப்படுகிறது.

காதலர் தினம்

ஸ்லாப் டேயின் முக்கியத்துவம்

காதலும், காதலர் தினமும், உங்களுக்கு தரும் கசப்புணர்வுகளை நீக்க இந்த நாட்களை பயன்படுத்தலாம். ஸ்லாப் தினத்தில், உங்கள் இதயத்தை உடைத்த முன்னாள் காதலை, அதற்கு காரணமானவர்களை, அறையும் நாள். 'அறைதல்' என்றால் அதே பொருள் படும்படி, அவர்களை அறைவது அன்று. உங்கள் மனக்கண் முன்னே, அவர்களை அறைந்து, அவர்களை உங்கள் வாழக்கையில் இருந்து தூக்கி எறிவதற்கான நாள். இந்த நாள், இளைஞர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் நாளாக கருதப்படுகிறது. இந்நாளில், நீங்கள் இத்தனை நாட்களாக மனதில் புழுங்கி கொண்டிருந்த கசப்புணர்வுகளுக்கு விடை கொடுக்குமாறு, அதை மறந்து, நண்பர்களுடன் சந்தோஷமாக களிக்கலாம். காதல் பிரச்னைகளுக்கு அரை விடுத்ததை போல, துக்கங்களை அறைந்து வெளியேற்றி, சந்தோஷமான வாழ்க்கையை துவங்க இந்த நாளை உபயோகிக்கலாம்.