
'கைதி தொடங்கி லியோ வரை': LCU-வின் 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் இன்று!
செய்தி முன்னோட்டம்
கோலிவுடின் இன்றைய தலைமுறை இயக்குனர்களில், பல வித்தியாசமான கதைக்களம் கொண்ட வெற்றி படங்களை தந்த இயக்குனரான லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் இன்று.
ஷார்ட் பிலிம் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் லோகேஷ். முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்த ஆவர், மாநகரம் படத்தின் மூலம், மெல்ல வெளிச்சத்திற்கு வந்தார்.
அவரின் கதை மீதும், அவர் இயக்கத்தின் மீதும், நம்பிக்கை வைத்து, அவரின் முதல் படத்தை தயாரித்தது 'Dream Warrior Pictures ' என்கிற தயாரிப்பு நிறுவனம் தான்.
முதல் படம், லோகேஷிற்கு நல்ல அங்கீகாரத்தை தந்தது.
ஒரு இரவில், சென்னை மாநகரில் நடக்கும் சம்பவங்கள், மூவர் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது போன்ற கதை.
பிறந்தநாள் ஸ்பெஷல்
லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்
தமிழ் ரசிகனுக்கு தகுந்தது போல நேர்த்தியாக புனையப்பட்ட திரைக்கதையின் மூலம், லோகேஷ் வெற்றிக்கண்டார்.
முதல் படத்தின் வெற்றி, அவரின் சினிமா கேரியரை, கியர் மாற்றி, ஹைஸ்பீடில் ஏற்றம் காண வைத்தது.
இரண்டாம் படத்தில், கார்த்தியுடன் இணைந்து, 'கைதி' படத்தை இயக்கினார். தமிழ் சினிமாவிற்கு வெகுவாக பரிச்சையப்படாத, திரைக்கதை. கதாநாயகி, டூயட் பாடல், ஹீரோ பில்ட்அப் என எந்த மசாலாவும் இன்றி, விறுவிறுப்பான திரைக்கதையை நம்பி எடுக்கப்பட்ட படம்.
தற்போது பலராலும் பேசப்படும் 'LCU-லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்'-இன் துவக்க புள்ளி இங்கு தான் ஆரம்பித்தது.
அதன் பின்னர், விஜயுடன் இணைந்து,'மாஸ்டர்' , கமலுடன் இணைந்து,'விக்ரம்' போன்ற வெற்றி படங்களை தந்த லோகேஷ், தற்போது மீண்டும் விஜயுடன் 'லியோ' என்ற படத்தை இயக்கி வருகிறார்.