
அஜித்தின் பில்லா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் இவர்களா? இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படங்கள்
செய்தி முன்னோட்டம்
மலையாள படவுலகில் இருந்து வந்து, தமிழ் திரையுலகிற்கு வந்து, முன்னணி கதாநாயகியாக கருதப்பட்டவர்களில், அசினுக்கு என்றும் முதல் இடம் தான். அவருக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு எனக்கூறலாம்.
அசின் தமிழில் இது வரை நடித்தது, 25 படங்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் சில வெற்றி படங்களில் நடித்தபிறகு, ஹிந்தி படவுலகிற்கு சென்ற அசின்,அங்கே சல்மான் கான் உடன் ஜோடியாக சில படங்களில் நடித்தார்.
அதன் பின்னர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கு குட்பை சொல்லிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகு, அவரின் புகைப்படங்கள் ஏதும் வெளியே வராமல், கவனத்துடன் இருக்கிறார் அசின். இருப்பினும் அவ்வப்போது, தனது குழந்தையின் புகைப்படங்களை மட்டும் இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.
பில்லா
கால்ஷீட் காரணமாக விலகிய அசின்
இதனிடையே, ட்விட்டரில் அவர் எடுத்த போட்டோஷூட் ஒன்றின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அது, 2007-இல் வெளியான 'பில்லா' படத்தின் போட்டோஷூட் என்றும், அதில் முதன்மை கதாநாயகியாக, சாஷா என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் அசின் தான் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அசினின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக, அவருக்கு பதிலுக்காகதான், நயன்தாரா ஒப்பந்தமானார் எனவும் செய்திகள் கூறுகின்றன.
பில்லா படத்தில் நயன்தாரா நடித்த நீச்சல் உடை காட்சி தான், அவரை மீண்டும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது எனக்கூறலாம்.
இதோடு,சி.ஜே. கதாபாத்திரத்தில், ஸ்ரேயா நடிப்பதாக இருந்ததாகவும், சிவாஜி படத்தின் ஒப்பந்தம் காரணமாக ஸ்ரேயா நடிக்க முடியாமல் போனதாகவும், அவருக்கு பதிலாக நமீதா நடித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
பில்லா படத்தில் அசின்!
Asin as Saasha from Billa 2007 . Due to date issues Nayanthara bagged the role
— Ponniyin Selvan (@ShamRahmaniac) March 9, 2023
Similarly Shriya was supposed to play CJ but she got replaced by Namitha pic.twitter.com/rVjxec9ILh