NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 20 ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலுவை ஒதுக்கிய 'தல' அஜித்: வெளியான உண்மை காரணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    20 ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலுவை ஒதுக்கிய 'தல' அஜித்: வெளியான உண்மை காரணம்
    நடிகர் அஜித்தும், வடிவேலுவும் நடித்த 'ராஜா' படத்தில் இருந்து ஒரு காட்சி

    20 ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலுவை ஒதுக்கிய 'தல' அஜித்: வெளியான உண்மை காரணம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 10, 2023
    03:09 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் அஜித்குமார், ராஜா என்ற படத்தில், நடிகை ஜோதிகாவுடன் நடித்திருந்தார். அந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார்.

    ஆனால், அதன் பிறகு வேறெந்த படத்திலும், வடிவேலுவுடன் நடிக்கவே இல்லை. இது எதார்த்தமாக நடந்தது அல்லவென்றும், அஜித் வேண்டுமென்ற இந்த முடிவை எடுத்தார் என்றும் தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன.

    அதன்படி, வடிவேலுவுடன், அஜித்திற்கு ஏற்பட்ட மனக்கசப்பு தான் காரணம் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

    20 ஆண்டுகளுக்கு முன்னர், எழில் இயக்கத்தில் உருவான படம் தான் ராஜா. ராஜா படத்தின் கதைப்படி, அஜித்தின் மாமாவாக நடித்திருந்தார் வடிவேலு.

    அதனால், அந்த கேரக்டருக்கு ஏற்ப, அந்த படம் முழுவதும், வடிவேலு அஜித்தை 'டா' போட்டு தான் அழைத்திருந்தார்.

    வடிவேலு

    அஜித்தை மரியாதை இல்லாமல் பேசிய வடிவேலு

    ஆனால், அதே பழக்கத்தில், படப்பிடிப்பு இல்லாத சமயத்திலும், நடிகர் வடிவேலு, அஜித்தை, 'வாடா', 'போடா' என்றே அழைத்தாராம்.

    அனைவருக்கும் மரியாதை தரவேண்டும் என நினைக்கும் அஜித்திற்கு, வடிவேலுவின் இந்த பேச்சு பிடிக்கவில்லை போலும்.

    அதனால் படப்பிடிப்பில், வடிவேலுவுடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம் அஜித்.

    ஆனால், தொடர்ந்து வடிவேலு, அதே போல தன்னை அழைத்து கொண்டிருந்ததால், இயக்குனர் எழிலிடம் முறையிட்டிருக்கிறார் அஜித்.

    எழிலும், வடிவேலுவிடம் இதை பற்றி பேசியுள்ளார். ஆனால் வடிவேலு, அஜித்தை 'டா' போடுவதை நிறுத்தவே இல்லை போலும்.

    அப்போது முடிவெடுத்தாராம் நடிகர் அஜித். இனி எப்போதும் வடிவேலுவுடன் நடிப்பதில்லை என்று.

    அந்த சமயத்தில், வடிவேலு கோலோச்சிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேலுவின் காமெடிக்காகவே பல படங்கள் ஓடின என்பது மறுப்பதற்கில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் அஜித்
    வடிவேலு
    கோலிவுட்

    சமீபத்திய

    2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா உக்ரைன்
    வால்மார்ட் தனது பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்  வால்மார்ட்
    'எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் உண்மையானவர்கள், மற்றவர்கள் பணத்தால் வாங்கப்பட்டவர்கள்': சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  எம்எஸ் தோனி
    ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு ஹைதராபாத்

    நடிகர் அஜித்

    24 மணி நேரத்தில் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படங்களின் டிரெய்லர் பட்டியல் இதோ! யூடியூப் வியூஸ்
    29 வருடங்களுக்கு பிறகு 'அஜித் 62'வில் இணையும் அஜித் -அரவிந்த்சாமி கூட்டணி திரைப்பட அறிவிப்பு
    தென்னிந்தியாவின் பிரபலமானவர் பட்டியலில் நடிகர் சூர்யா முதலிடம்! நடிகர் சூர்யா
    'வேதாளம்' ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி; இணையத்தை கலக்கும் அவரின் புதிய கெட்டப் வைரல் செய்தி

    வடிவேலு

    துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும் - வடிவேலுவின் சமீபத்திய பேட்டி தமிழ் திரைப்படம்
    வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் வைரலான ட்வீட்
    வடிவேலுவுக்கு முனைவர் பட்டம்: அண்ணா பல்கலைக்கழகத்தை ஏமாற்றிய பலே கில்லாடிகள் தமிழ்நாடு

    கோலிவுட்

    பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறதா? தமிழ் திரைப்படம்
    'யூத்' விஜய் Vs 'லியோ விஜய்: நடிகர் விஜய் குறித்து சிலாகிக்கும் 'நட்டி' நட்ராஜ் விஜய்
    பழம்பெரும் எம்.என்.நம்பியாரின் விருதுகள் உள்ளிட்டவற்றிற்கு உரிமை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு தமிழ் திரைப்படம்
    மறைந்த நடிகர் மயில்சாமியின் இறப்பு குறித்து விளக்கம் அளித்த மகன்கள் ட்ரெண்டிங் வீடியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025