Page Loader
விரைவில் வர போகிறது திரிஷ்யம் 3; பான் இந்தியன் படமாக வெளியிட திட்டம்
திரிஷ்யம் படத்தில், மோகன்லாலும், மீனாவும் நடித்திருந்தனர்

விரைவில் வர போகிறது திரிஷ்யம் 3; பான் இந்தியன் படமாக வெளியிட திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 11, 2023
02:13 pm

செய்தி முன்னோட்டம்

மலையாளத்தில் மோகன்லால் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கிய படம்தான் 'திரிஷ்யம்'. அந்த படத்தின் வெற்றி, திரிஷ்யம் படத்தை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில், அதை ரீமேக் செய்யவைத்தது. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் வெளியானது. திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும், மலையாளத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டது. தற்போது அதன் மூன்றாம் பக்கம் எடுக்கப்படவுள்ளதாகவும், முக்கிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்ததும், அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 'திரிஷ்யம்' வரிசையில், அதுதான் கடைசி படம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாகத்தை, ஒரே நேரத்தில், தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில், முன்னணி நடிகர்களை வைத்து, ஒரே நேரத்தில் இயக்கி, வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

விரைவில் திரிஷ்யம் 3!