
நடிகர் ரஜினிகாந்துக்கு வரும் மார்ச் 26 -ஆம் தேதி,சென்னையில் பாராட்டு விழா
செய்தி முன்னோட்டம்
ரஜினிகாந்தின் ரசிகர்களை ஒன்றிணைத்து 'மனிதம் காத்து மகிழ்வோம்' என்ற பெயரில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பாராட்டு விழா நடத்த முடிவெடுத்துள்ளனர்.
வரும் மார்ச் 26-ஆம் தேதி, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், ரஜினிகாந்திற்கு விழா எடுக்க போகிறார்கள். இதற்காக தீவிரமாக விழா அழைப்பிதழைகளை பிரபலங்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.
இதற்காக, சென்னை மேயர் பிரியாவிடம் அனுமதி பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், சென்னை காவல் துறையிடமும் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது எனக்கூறப்படுகிறது.
சுமார், 10 ஆயிரம் ரசிகர்கள் கூடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விழாவில், ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணராவ் கெய்க்வாட், கலைப்புலி எஸ்.தாணு, ஏ.சி.சண்முகம், சு.திருநாவுக்கரசர், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ். ரவிகுமார், சைதை. சா.துரைசாமி உட்பட திரையுலகினர் பலர் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பாராட்டு விழாவிற்கு பத்திரிகைகள் விநோயோகிக்கப்படுகிறது
தலைவர் @rajinikanth ரசிகர்கள் தொண்டாற்றும் #மனிதம்_காத்து_மகிழ்வோம் விழாவிற்கான அழைப்பிதழ்கள் #தென்சென்னை (மே) மாவட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.R.ரவிச்சந்திரன் அவர்களிடம் வழங்கப்பட்டது.#Manitham_Kaathu_Magizhvom#RajinikanthRasigarNarpaniMandram#SouthChennai pic.twitter.com/EYb7EcXJRz
— Sholinghur N Ravi (@SholinghurRavi) March 10, 2023