Page Loader
நோய் வாய்ப்பட்டுள்ள  தயாரிப்பாளர் V.A  துரையிடம் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
V.A துரையிடம் போனில் பேசிய ரஜினி

நோய் வாய்ப்பட்டுள்ள தயாரிப்பாளர் V.A துரையிடம் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 09, 2023
03:06 pm

செய்தி முன்னோட்டம்

பாலாவின் பிதாமகன், விஜயகாந்த் நடிப்பில் வெளியான கஜேந்திரா போன்ற வெற்றிப்படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. சமீபத்திய செய்திகளின்படி, இவர் சிலஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. அது குறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தனக்கு சிகிச்சைக்கு கூட பணமின்றி தவித்து வருவதாகவும், அதோடு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர் எனவும், அவர் உதவ வேண்டும் எனவும் கூறி இருந்தார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தயாரிப்பாளர் V.A துரையிடம் பேசியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. துறையின் நலனை விசாரித்த ரஜினிகாந்த், எதற்கும் கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளாதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அதோடு, 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நேரில் வந்து சந்திப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கோலிவுட்

தயாரிப்பாளருக்கு உதவிய திரைப்பிரபலங்கள்

V A துரை, பாலாவின் இயக்கத்தில் ஒரு படம் எடுப்பதாக இருந்து, பின்னர் அது பல காரணங்களால் நின்றுவிட்டது. அதன்பின்னர் பயங்கர பணக்கஷ்டத்தை அவர் சந்தித்தாகவும், தற்போது வறுமையில் இருப்பதாகவும், நண்பர்கள் பரிதாபப்பட்டு, அவரை ஒரு அறையில் தங்க வைத்துள்ளதாகவும் அவர் வீடியோ வெளியிட்டிருந்தார். உடனடியாக நடிகர் சூர்யா, மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சத்தை வழங்கி இருந்தார். மேலும் நடிகர் கருணாஸ் ரூ.50 ஆயிரம் வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களுடன், நடிகர் ராகவா லாரன்ஸும் ரூ 5. லட்சம் வரை வழங்குவதாக அறிவித்தார். வி.ஏ. துரை, நடிகர் ரஜினிகாந்த்தின் 'பாபா' படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.