Page Loader
ரஜினிகாந்தின் 'தலைவர் 170 ' படத்தை தயாரிக்கபோவதாக லைகா நிறுவனம் அறிவிப்பு
ரஜினிகாந்த் படத்தை தயாரிக்கும் லைகா

ரஜினிகாந்தின் 'தலைவர் 170 ' படத்தை தயாரிக்கபோவதாக லைகா நிறுவனம் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 02, 2023
11:15 am

செய்தி முன்னோட்டம்

ரஜினிகாந்தின் 170 படத்தை தயாரிக்க போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் TG ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கப்போவதாக அந்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது ஜெயிலர் படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள ரஜினிகாந்த், அடுத்து தனது மகள் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதை தொடர்ந்து இந்த படத்தில் அவர் இணையவுள்ளார். 'தலைவர் 170' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்ட இந்த படம், 2024 வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இணைந்துள்ள மற்ற நடிகர் நடிகைகளை பற்றி ஏதும் தகவல் இல்லை. இந்த மகிழ்ச்சியான செய்தியை லைகா, தங்கள் ட்விட்டர் பக்கத்தில், அறிக்கை மூலமாக பகிர்ந்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

தலைவர் 170