Page Loader
'கந்தாரா 2'-வில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா?இணையத்தில் கசிந்த தகவல்
'கந்தாரா 2'-வில் ரஜினிகாந்த் நடிக்கிறாரா?

'கந்தாரா 2'-வில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா?இணையத்தில் கசிந்த தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 22, 2023
02:53 pm

செய்தி முன்னோட்டம்

காந்தாரா படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.இரண்டாம் பாகம், முதல் பாகத்தின் முன்னுரையை போன்றது என்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி தெரிவித்திருந்தார். தற்போது, அந்த இரண்டாம் பாகத்தில், முக்கிய வேடத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. இதனிடையே காந்தாரா படத்தை பார்த்தபின், ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டிக்கு தங்கச்சங்கிலியை பரிசாக வழங்கி, பாராட்டினார். இந்நிலையில், இரண்டாம் பாகத்தில், ரஜினி நடிக்கவிருப்பதாக ஊடகத்தில் பரவிவருவது குறித்து ரிஷப் ஷெட்டியிடம் கேட்கப்பட்டபோது, அவர் ஆமோதிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஒரு குறியீடாக எடுத்துக்கொள்ளலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், ரஜினியை வேறு ஒரு பான்-இந்தியா படத்தில் நடிக்க வைக்க திட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

கந்தாரா 2வில் ரஜினி?

ட்விட்டர் அஞ்சல்

பான் இந்தியா படத்தில் ரஜினி?