
கந்தரா படத்தின் ரிஷப் ஷெட்டிக்கு தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' விருது
செய்தி முன்னோட்டம்
2023-ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு விருது வழங்கப்பட இருக்கிறது.
சென்ற ஆண்டு வெளியான காந்தாரா படத்தின் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, தன்னுடைய நேர்த்தியான நடிப்பால், அனைவரையும் வியக்க வைத்தார்.
சிறிய பட்ஜெட்டில் உருவாகி, வசூலை வாரிக்குவித்த படம் தான் காந்தாரா.
கர்நாடக மாநிலத்தில் வாழும், மலைவாழ் மக்களின் வாழ்வையும், அவர்கள் கலையையும் தத்ரூபமாக பிரதிபலித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
காந்தாரா படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
இரண்டாம் பாகம், முதல் பாகத்தின் முன்னுரையை போன்றது என ரிஷப் ஷெட்டி தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
ரிஷப் ஷெட்டிக்கு விருது
நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு விருது |@shetty_rishab | #RishabShetty | #Award | #Malaimurasu | pic.twitter.com/bo4ntkT9EJ
— Malaimurasu TV (@MalaimurasuTv) February 16, 2023