சிறு வயது கீர்த்தி சுரேஷ்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை கீர்த்தி சுரேஷின், அக்காவான ரேவதி சுரேஷின் பிறந்த நாள் இன்று. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, கீர்த்தி சுரேஷ், அவருடன் சிறு வயது முதல் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். முன்னாள் நடிகையான, மேனகா, கேரளா திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு, ரேவதி மற்றும் கீர்த்தி என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இளையவர் கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவரின் மூத்த மகளான ரேவதி, ஆடை வடிவமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷிற்கும் அவ்வப்போது ரேவதி தான் ஆடை வடிவமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அதோடு, அவரின் தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தையும் மேற்பார்வை செய்து வருகிறார்.