
'ஒல்லி-பெல்லி' நடிகை இலியானாவிற்கு தடையா? வைரலாகும் புதிய தகவல்
செய்தி முன்னோட்டம்
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில், 'கேடி' படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் இலியானா. அந்த படத்தில் அவருடன் தமன்னாவும் நடித்திருந்தார்.
அதன் பிறகு, தெலுங்கு படவுலகில் கவனம் செலுத்தி வந்தார். அங்கு முன்னணி நடிகையாக கோலோச்சினார் இலியானா.
அதன் பின்னர், ஹிந்தி படவுலகில் கால் பதித்தார்.
தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில், 'நண்பன்' என்ற படத்தில் விஜய்யக்கு ஜோடியாக நடித்தார்.
அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை ஒட்டி, தமிழ்நாட்டின், பட்டிதொட்டி எல்லாம் அவரை தெரிய ஆரம்பித்தது.
ஆனால், அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, மேலும் சில தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் ஹிந்தி படவுலகிற்கே சென்று விட்டார் என செய்திகள் வந்தன.
நடிகை இலியானா
தடை விதித்துள்ள தயாரிப்பாளர்கள் சம்மேளனம்
சிலர், அவரின் சொந்த ஊரான கோவாவிற்கே சென்று விட்டார் என்றும், அவரின் நீண்ட நாள் காதலனான, ஆண்ட்ரூ என்கிற ஆஸ்திரேலியா புகைப்படக் கலைஞருடன் விரைவில் திருமணம் என்றெல்லாம் பேச்சு எழுந்தது.
அவரது அதிக எடை காரணமாகத்தான் பட வாய்ப்புகள் இல்லை என தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.
அதன்படி, கோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ஒருவர், இலியானாவை தமிழ் படம் ஒன்றிற்கு புக் செய்தாராம். ஆனால், அட்வான்ஸ் வாங்கிய நிலையில், கால்ஷீட் தராமல் இழுத்தடித்துக்கொண்டே இருந்தாராம் இலியானா. அட்வான்ஸ் பணத்தையும் திரும்ப தரவே இல்லை. இதனால், அந்த தயாரிப்பாளர், இலியானா மீது தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாவே, தென்னிந்திய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.