Page Loader
கோவிலில் சிறப்பு பூஜை செய்த சமந்தா; ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டாரா என ரசிகர்கள் குழப்பம்
லிங்கபைரவி முன் தியானம் செய்த நடிகை சமந்தா

கோவிலில் சிறப்பு பூஜை செய்த சமந்தா; ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டாரா என ரசிகர்கள் குழப்பம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 15, 2023
05:18 pm

செய்தி முன்னோட்டம்

பிறப்பால் கிறிஸ்துவரான நடிகை சமந்தா, நடிகர் நாகா சைதன்யாவை திருமணம் செய்த போது, இரு மதங்களையும் தழுவியே திருமண நிகழ்வு நடைபெற்றது. காலை ஹிந்து முறைப்படியும், மாலை, கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அதன் பின்னர், இருவருக்கும் விவாகரத்தான பின்னர், தனது தோழியுடன், ஹரித்துவாருக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார். அப்போதே பல ஊடகங்கள், சமந்தா ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டார் என செய்திகள் வெளியிட்டன. அதை தொடர்ந்து, ஜக்கி வாசுதேவ்வின் ஈஷாவில் தன்னை இணைத்து கொண்டது போல புகைப்படங்கள் வெளியாகின. அங்கு நடைபெற்ற சிவராத்திரி விழாவிலும் கலந்து கொண்டார் சமந்தா. யசோதா பட வெளியீட்டிற்கு முன்னர், தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் சமந்தா.

ட்விட்டர் அஞ்சல்

பழனியில் சமந்தா

சமந்தா

மதம் மாறினாரா சமந்தா?

அந்த பட வெளியீட்டு விழாவின் போது, சமந்தாவின் கைகளில் ஒரு ஜெபமாலை இருந்தது. அதை குறித்து கருத்து தெரிவித்த சமந்தாவின் ரசிகர்கள், அது கிறிஸ்துவ மதத்தினர் பயன்படுத்தியும் ஜெபமாலை என்றும், தன்னுடைய உடலும் மனமும் நலம் பெற வேண்டும் என சமந்தா அதை தன்னுடனே எடுத்து வருகிறார் எனவும் கூறின. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர், பழனி மலைக்கு வருகை தந்தார் சமந்தா. பழனிமலை படிக்கட்டுகளில், விளக்கேற்றி, முருகனை வணங்கி சென்றார். தொடர்ந்து, தற்போது, அவரின் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'சாகுந்தலம்' படத்திற்காக, கோவிலில் சிறப்பு பூஜை செய்தது போன்ற புகைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன. அதை பார்த்த ரசிகர்கள், சமந்தா எந்த மதத்தை பின்பற்றினாலும் சரி, அவர் உடல்நலம் பெற்றாலே போதும் என கூறிவருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

சாகுந்தலம் படத்திற்காக பூஜை செய்த சமந்தா