Page Loader
நாகா சைதன்யாவினால் அபார்ஷன் செய்த சமந்தா? ரசிகர்கள் அதிர்ச்சி
சமந்தா - நாகா சைதன்யா பிரிவிற்கான காரணம் என ட்விட்டரில் ஒரு பதிவு வைரல்

நாகா சைதன்யாவினால் அபார்ஷன் செய்த சமந்தா? ரசிகர்கள் அதிர்ச்சி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 14, 2023
06:20 pm

செய்தி முன்னோட்டம்

இரு தினங்களுக்கு முன்னர், உமைர் சந்து என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், சமந்தா கூறியதாக ஒரு பதிவை இட்டிருந்தார். அதில், திருமண வாழ்க்கையில், சமந்தாவை, நாகா சைதன்யா அடித்து துன்புறுத்தியதாகவும், அவர் கொடுமை தாளாமல், அப்போது கர்ப்பமாக இருந்த சமந்தா, அபார்ஷன் செய்ய நேர்ந்ததாகவும், நல்ல வேளையாக தான் விவாகரத்து பெற்று விட்டதாக சமந்தா கூறியதாக அந்த பதிவில் தெரிவித்திருந்தார். இந்த ட்விட்டர் பதிவால், சமந்தாவின் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். சென்ற ஆண்டு, ஹிந்தியில் வெளியாகும் பிரபல நேர்காணல் நிகழ்ச்சியில், சமந்தாவிடம், நாகா சைதன்யாவோடு தற்போது அவரது உறவு எவ்வாறு இருக்கிறது எனக்கேட்கப்பட்டது. அதற்கும், இதே போன்றதொரு பதிலை தான் அவர் தந்திருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

சமந்தா குறித்த பதிவு