
கீரவாணி ஆஸ்கார் வென்றதை அடுத்து ரசூல் பூக்குட்டியை ட்ரோல் செய்தவருக்கு 'நச்' பதில் தந்த ரசூல்
செய்தி முன்னோட்டம்
நேற்று, (மார்ச் 13) அன்று நடைபெற்ற ஆஸ்கார் விருது விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்தியாவிலிருந்து தேர்வான 'RRR ' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல், சிறந்த பாடலாக தேர்வானது.
இதற்காக, அந்த பாடலின் இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலாசிரியர் சந்திரபோசும், ஆஸ்கார் விருதை பெற்றனர்.
இந்த விருது பெற்றதற்கு நாட்டு மக்களும், பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், 14 வருடங்கள் முன்பு முதல் முறையாக ஆஸ்கார் விருதை வென்ற இந்தியன் என்ற பெருமையை பெற்ற ரசூல் பூக்குட்டியும் வாழ்த்துகளை பகிர்ந்திருந்தார்.
ஆனால், ஒரு சில விஷம ஆசாமிகள், அவரை ட்ரோல் செய்தனர். அதற்கு தக்க பதிலடி தந்துள்ளார் ரசூல். அந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ரசூல் பூக்குட்டி
Where are these guys coming from… I been there and done that 14yrs ago, even before you all had heard of Oscars! https://t.co/EEVPVafsEV
— resul pookutty (@resulp) March 13, 2023