இன்று முதல், சென்னையில் துவங்கவிருக்கும் ஈரானிய படவிழா
சென்னையில், பல உலக திரைப்படவிழாக்கள் நடைபெறுவதுண்டு. மாதந்தோறும், பிரெஞ்சு திரைப்படவிழா, வெனிசுலா மொழி படவிழா என உலகமொழிகளில் திரையிடப்பட்ட, பல நல்ல படங்களை, நம் நாட்டு மக்கள் காண்பதற்கு, இண்டோ சினி அப்ரிசியேசன் பவுண்டேசன் (ICAF) திரைப்படச் சங்கம் அவனசெய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த வாரம் திரையிடப்போவது ஈரானிய மொழி திரைப்படங்களை. அதன் படி, இன்று முதல், மார்ச் 14, 15, 16 ஆகிய 3 நாட்களும், மாலை 6 மணி தொடங்கி, தினமும் இரண்டு படங்கள் வீதம், மொத்தமாக 6 படங்களை திரையிட திட்டமிட்டுள்ளனர். இந்த ஈரானிய திரைப்படவிழா, சென்னை, கல்லூரி சாலையில் அமைந்துள்ள, Alliance Francaise வளாகத்தில் நடைபெறும்.
யதார்த்தத்தை படம்பிடிக்கும் ஈரானிய திரைப்படங்கள்
செய்திகளின் படி, இந்த விழாவை, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்,Culture House ofthe Islamic Republic ofIran inMumbai-யுடன், இணைந்து,Indo Cine Appreciation Foundation (ICAF) திரைப்படச் சங்கம் நடத்துகிறது. இந்தவிழாவில், Wolf Cubs of Apple Valley, Sea Boys, Legend of Bonasanthe Genie in lamp, Lost Whispers in the Distance மற்றும் Mehran ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த படவிழாவிற்கு, முன்னதாக நுழைவு சீட்டோ, அனுமதியோ வாங்க தேவை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஈரானிய படங்கள் யதார்த்தத்தையும், அவர்களின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் என்பது சினிமா விமர்சகர்களின் பரவலான கருத்து.