Page Loader
மகளுடன் போட்டோஷூட் நடத்திய நடிகை கௌதமி: வைரலாகும் புகைப்படங்கள்
மகளுடன் போட்டோஷூட் நடத்திய நடிகை கௌதமி

மகளுடன் போட்டோஷூட் நடத்திய நடிகை கௌதமி: வைரலாகும் புகைப்படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 10, 2023
11:42 am

செய்தி முன்னோட்டம்

முன்னாள் நடிகை கௌதமி, தனது மகள் சுப்புலக்ஷ்மியுடன், ஒரு போட்டோஷூட் நிகழ்த்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 90களில் முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகில் கோலோச்சியவர், கௌதமி. 1998ம் ஆண்டு சந்தீப் பாடியா என்பவரை திருமணம் செய்துகொண்ட கௌதமி, திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்தார். இவருக்கு சுப்புலக்ஷ்மி என்ற மகள் இருக்கிறார். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றபின்னர், மகளுடன் தனியாக தான் வசித்து வருகிறார் கௌதமி. சினிமா வெளிச்சம் படாமல் பாதுகாப்பாக வளர்த்த தன்னுடைய மகளுடன் புகைப்படத்தை, சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார் கௌதமி. அதில், கௌதமி போலவே இருக்கும் சுப்புலக்ஷ்மி-ஐ பார்த்த பலரும், கோலிவுட்டிற்கு அடுத்த நாயகி தயார் என பதிவிட்டு வருகின்றனர்.

Instagram அஞ்சல்

கௌதமின் மகள் சுப்புலக்ஷ்மி

Instagram அஞ்சல்

கௌதமின் மகள் சுப்புலக்ஷ்மி