விஷாலுடன் இணைந்து, மற்றுமொரு போலீஸ் கதையை எடுக்க தயாராகும் டைரக்டர் ஹரி
இயக்குனர் ஹரி தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த படமும் சாமி, சிங்கம் வரிசையில் ஒரு போலீஸ் கதை தான் எனவும் கூறப்படுகிறது. ஹரி கடைசியாக, அருண் விஜய் மற்றும் பிரியா பவானி ஷங்கரை வைத்து 'யானை' படத்தை எடுத்திருந்தார். அந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. அருண் விஜய்யின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது, 'தாமிரபரணி', 'பூஜை' படத்திற்கு பிறகு, விஷாலுடன் இணையவுள்ளார் எனத்தெரிகிறது. தன்னுடைய புதிய படத்தில் விஷாலுக்கு காக்கி சட்டை மாட்டிவிட தயாராகிறார் ஹரி. இயக்குனர் ஹரியின் இயக்கத்தில், 'சாமி', 'சாமி 2' மற்றும் 'சிங்கம்', 'சிங்கம் 2', 'சிங்கம் 3' போன்ற படங்களில் வந்த போலீஸ் கதாபாத்திரங்கள் நல்ல பெயர் பெற்று தந்தது.
செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவக்கம்
இருப்பினும் இந்த கதாபாத்திரங்களில் இருந்து வித்தியாசமான ஒரு போலீஸ் கதாபாத்திரத்தை, அவர் எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. சென்ற ஆண்டே, சூர்யாவும், ஹரியும் மீண்டும் இணையப்போவதாக செய்திகள் வெளிவந்தது. 'அருவா' என அந்த படத்திற்கு பெயரிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. பாலா படத்தில் இருந்து வெளிவந்ததும், சூர்யா தேர்ந்தெடுத்த இயக்குனர் ஹரி தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அந்த படம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு சூர்யாவின் கால்ஷீட் காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும், ஹரி தனது அடுத்த படவேலைகளை துவங்கிவிட்டார். விஷாலுடன் அவர் இணையப்போகும் இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் துவங்கும். இந்த படத்தை, கார்த்திக் சுப்புராஜின், 'ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்க போகிறது.
இந்த காலவரிசையைப் பகிரவும்