LOADING...
ஆதியின் 'சப்தம்' படத்தில் இணைகிறார் நடிகை லைலா
ஆதியுடன் இணையும் நடிகை லைலா

ஆதியின் 'சப்தம்' படத்தில் இணைகிறார் நடிகை லைலா

எழுதியவர் Venkatalakshmi V
Mar 09, 2023
01:30 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் அறிவழகன், 'ஈரம்' படத்தை தொடர்ந்து ஆதியுடன் இணையும் படம் 'சப்தம்'. 'ஈரம்' படத்தை போலவே திரில்லர் ஜானெரில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், சென்ற வாரம், லட்சுமி மேனன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவரை தொடர்ந்து தற்போது, நடிகை லைலாவும் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழுவினர் ட்விட்டரில் அறிவித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு, நடிகை லைலா தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் கார்த்தியுடன் 'சர்தார்' படத்திலும், அதை தொடர்ந்து SJ சூர்யாவுடன், 'வதந்தி' என்ற வெப் சீரிஸ்சிலும் நடித்தார். தற்போது, ஆதியுடன் அவர் 'சப்தம்' படத்தில் இணைந்துள்ளார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்ற மாதம் முடித்துள்ளனர். இதுவரை மும்பை, மூணாறு, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நிகழ்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

சப்தம் படத்தில் இணையும் லைலா