Page Loader
அறிவழகனின் 'சப்தம்' படத்தில், ஆதியுடன் இணையும் லட்சுமி மேனன்
சப்தம் படத்தில், அதியுடன் இணையும் லட்சுமி மேனன்

அறிவழகனின் 'சப்தம்' படத்தில், ஆதியுடன் இணையும் லட்சுமி மேனன்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 27, 2023
02:55 pm

செய்தி முன்னோட்டம்

'ஈரம்' படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையும் 'சப்தம்' படத்தில் இணைந்துள்ளார் நடிகை லட்சுமி மேனன். 'கும்கி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆன லட்சுமி மேனன், ஒரு சில படங்களுக்கு பிறகு, படிப்பில் கவனம் செலுத்துவதற்காக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு, 'புலிக்குத்தி பாண்டி' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி தந்தவர், தற்போது, 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பை முடித்தார். தொடர்ந்து 'சப்தம்' படத்தில் முன்னணி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அறிவித்தது. இதுவரை மும்பை, மூணாறு, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ள படக்குழுவினர், முதற்கட்ட படப்பிடிப்பை சிறிது நாட்களுக்கு முன் முடித்ததாக அறிவித்தனர். இந்த படத்தை, 7G பிலிம்ஸ் சிவா, ஆல்பா பிரேம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

ஆதியுடன் இணையும் லட்சுமி மேனன்