Page Loader
சப்தம் பட அப்டேட்: முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்ததாக படக்குழு அறிவிப்பு
சப்தம் படத்தின் முதல் நாள் பூஜையின் போது எடுத்த புகைப்படம்

சப்தம் பட அப்டேட்: முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்ததாக படக்குழு அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 14, 2023
02:41 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2009-ஆம் ஆண்டு, ஆதி நடிப்பில், 'ஈரம்' படத்தை இயக்கிய அறிவழகன், மீண்டும் அதே கூட்டணியில், தற்போது, 'சப்தம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். ஈரம் படத்தில் ஹிட் பாடல்களை தந்த இசையமைப்பாளர் தமன் தான், இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். மூணார் மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, தற்போது முடிந்து விட்டதாக இயக்குனர் அறிவழகன், தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ஈரம், படத்தை போன்றே இதுவும் ஒரு ஹாரர் படமாக இருக்குமென ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை, 7G பிலிம்ஸ் சிவா மற்றும் ஆல்பா பிரேம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இந்த படத்தை எடுத்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

சப்தம் திரைப்படத்தின் அப்டேட்: