அடுத்த செய்திக் கட்டுரை
நகைச்சுவை நடிகர்களும், அவர்களால் பிரபலமான பாடல்களும்-3
எழுதியவர்
Venkatalakshmi V
Mar 06, 2023
09:34 am
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரைப்படங்களில் வெளிவரும் பாடல்கள் சில, அவற்றின் இசையால், பாடகர்களால், வரிகளால் வெற்றிபெறும், மற்றும் சில அதில் நடித்த நடிகர்களால் வெற்றி பெறும்.
ஆனால், சில பாடல்கள் காமெடி நடிகர்கள் பாடியதால் பிரபலம் அடைவதும் உண்டு. அப்படி நடிகர்கள் பாடி, பிரபலம் ஆன பாடல்கள் சிலவற்றை பகுத்து, தினந்தோறும் இங்கே காண்போம்:
வெற்றிக்கொடி கட்டு: பார்த்திபனுடன் இணைந்து வடிவேலுவுடன் நடித்திருந்த காமெடி படங்களில், இந்த படம் எவெர்க்ரீன் பேவரெட். அந்த 'துபாய்' காமெடியில், வடிவேலு 'உயிரே உயிரே' பாடலை, வரிகள் மாற்றி பாடியிருப்பார். சேரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் தேசிய விருது பெற்றது.இந்த படத்தில், முரளி, மீனா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் காமெடி வடிவேலுவை உலகமெங்கும் பிரபலமடைய வைத்தது.
முகநூல் அஞ்சல்