Page Loader
நடிகர் சிம்பு படத்தில், சிறப்பு தோற்றத்தில் கமல் நடிக்கப்போகிறாரா?
நடிகர் கமலும், சிம்புவும் ஒரே படத்தில் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

நடிகர் சிம்பு படத்தில், சிறப்பு தோற்றத்தில் கமல் நடிக்கப்போகிறாரா?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 15, 2023
06:03 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சிலம்பரசன்- இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இணையும் அடுத்த படத்தை, கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிக்கப்போவதாக சென்ற வாரம் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் வெற்றிக்கு பிறகு, தேசிங் பெரியசாமி, சிம்புவை இயக்கப்போகிறார் என பல நாட்களாக பேச்சு எழுந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை பற்றி, கமல்ஹாசன், "சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்! #STR48" எனக்குறிப்பிட்டு இருந்தார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், சிம்புவுடன், அனிருத் இணையப்போகும் முதல் படம் இது எனவும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

கமல்ஹாசன்

முக்கிய வேடத்தில் கமல்?

இந்நிலையில், அடுத்த இன்ப அதிர்ச்சியாக, இந்த படத்தில், உலகநாயகன் கமல் ஹாசனும் முக்கிய வேடத்தில் நடிப்பார் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. கமல் நடிப்பது, முற்றிலும் ரகசியமாக வைத்திருக்கவும் படக்குழு தீர்மானித்துள்ளதாகவும் தெரிகிறது. கமலின், முந்தைய படத்தில், சூரிய 'rolex ' என்று கதாபாத்திரமாக கெஸ்ட் ரோலில் தோன்றினார். அதேபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் கமலை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த படத்துக்காக, சிம்பு, தாய்லாந்து சென்று, மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்று வருகிறார் எனக்கூறப்படுகிறது. மறுபுறம், கமல் ஹாசன், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்தியன் 2 படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்க்காக வெளிநாடு செல்ல விருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.