
சிம்புவின் 'பத்து தல' ஆடியோ வெளியீட்டு விழா வரும் மார்ச் 18 அன்று நடைபெறும் என அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
சிம்பு, கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் 'பத்து தல' திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
'ஏஜிஆர்' என்ற பெயரில், டான் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்தை, 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய ஒபேலி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் இசையமைப்பாளர், ஏ.ர். ரஹ்மான். படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி,ஹிட் ஆகியுள்ள நிலையில், தற்போது, படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, 'பத்து தல' படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பு.
அதன்படி, வரும், மார்ச்-18, மாலை 5 மணிக்கு, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில், நடிகர் ஆர்யாவும்- சாயீஷாவும் கௌரவ வேடத்தில் நடிக்கின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
பத்து தல ஆடியோ வெளியீட்டு விழா
The Mega-Grand Audio Launch of #Atman @SilambarasanTR_ @Gautham_Karthik starrer #PathuThala is all set to get bigger!
— Studio Green (@StudioGreen2) March 14, 2023
March 18 from 5PM onwards at Nehru Indoor Stadium Chennai.
An @arrahman musical
🎬 @nameis_krishna
Produced by @jayantilalgada @Kegvraja pic.twitter.com/fm0z7CcNCM