
'பத்து தல' படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் ஆர்யாவும், சாயிஷாவும்
செய்தி முன்னோட்டம்
சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல' திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த இயக்குனர் ஒபலி என் கிருஷ்ணா, நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவி நடிகை சாயிஷா இருவரும், 'பத்து தல' படத்தில் சிறப்பு வேடத்தில் நடிப்பதாக கூறினார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
'டெட்டி' படத்திற்கு பிறகு, சாயிஷா தோன்றும் தமிழ் படம் இதுதான்.
மேலும் இந்த படத்தில், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜய் அருணாச்சலம், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
'முஃதி' என்ற கன்னட படத்தின் தழுவலாக இந்த படம் எடுக்கப்பட்டாலும், அதிலிருந்து 90 % மாற்றப்பட்டுள்ளது எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
பத்து தல படத்தில் ஆர்யாவும் சாயீஷாவும்
#Arya and #Sayyeshaa to play a special cameo in #PathuThala 🤩 pic.twitter.com/5ppv6tGxMx
— AmuthaBharathi (@CinemaWithAB) March 3, 2023