Page Loader
சிலம்பரசன்- கவுதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது
சிம்பு நடிக்கும் 'பத்து தல' டீசர் வெளியானது

சிலம்பரசன்- கவுதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 03, 2023
05:39 pm

செய்தி முன்னோட்டம்

சிலம்பரசனுடன் இணைந்து கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம், 'பத்து தல'. இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்டூடியோ க்ரீன், இதை ட்விட்டரில் வெளியிட்டனர். 2017 ஆம் ஆண்டு வெளியான கன்னடப் படமான முஃப்தியின் ரீமேக்தான் பத்து தல. இந்த படத்தை ஒபலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இதன் ஒரிஜினல் பதிப்பில், சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் தான் சிலம்பரசன் நடிக்கிறார். இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டீஜய் அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை AR .ரஹ்மான். இவரின் இசையில் வெளியான 'நம்மசத்தம்' பாடல் ட்ரெண்ட் ஆகி வருகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

பத்து தல டீசர்!