
பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'பத்து தல' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
செய்தி முன்னோட்டம்
சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' படத்தின் முதல் பாடலான 'நம்மசத்தம்', வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளிவருமென அப்படத்தின் தயாரிப்பு தரப்பு நேற்று (ஜன. 31) அதிகாரபூர்வமாக அறிவித்தது.
கன்னட படமான 'முஃப்தி' படத்தின் ரீமேக்காக வெளிவரும் இந்த 'பத்து தல' படத்தை இயக்குவது, ஒபலி என்.கிருஷ்ணா ஆவார். இவர், 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில், சிம்புவிற்கு நிகரான பாத்திரத்தில், கவுதம் கார்த்திக்கும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார்.
படத்தின் இசை, ஏ.ஆர்.ரஹ்மான். படத்தின் இறுதி கட்ட வேலைகள் முடிவடைந்த நிலையில், படத்தின் முதல் பாடலை இன்னும் 2 நாட்களில் வெளியிட போகிறார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
'பத்து தல' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
#nammasatham guys https://t.co/Dhk9N3nNY4
— Obeli.N.Krishna (@nameis_krishna) January 31, 2023