ஆயுர்வேத முறைப்படி, தினமும் ஆயில் புல்லிங் செய்யும் நடிகை அதிதி ராவ்
ஆயுர்வேத முறைப்படி, தினமும் ஆயில் புல்லிங் செய்வது, உடலுக்கு நன்மை தரும் என வல்லுநர்கள் கூறிவருகிறார்கள். இது புதிய கண்டுபிடிப்பு அல்ல. காலம்காலமாக நமது மூதாதையர்கள் செயல்படுத்தி வந்த ஆரோக்கியமுறை தான். நடிகை அதிதி ராவ், தனது உடல் ஆரோகியத்திற்காக அந்த முறையை தான் தினமும் செயல்படுத்தி வருவதாக தற்போது தெரிவித்துள்ளார். "இது மிகவும் அபத்தமானது, ஆனால் எள், தேங்காய் எண்ணெய் போன்ற நல்ல தரமான, குளிர் அழுத்தப்பட்ட எண்ணெயை, ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். நான் எள் எண்ணெய் பயன்படுத்துகிறேன். பின்னர் நீங்கள் அதை வாயில் ஊற்றி ஆயில் புல்லிங் செய்யவும். முதலில் கடினமாக தோன்றும்,பழகுவதற்கு சிறிது நேரம் ஆகும். இது மிகவும் நல்லது", என ஒரு உரையாடலில் அவர் கூறினார்.
ஆயில் புல்லிங்கின் நன்மைகள்
ஆயுர்வேதத்தில், கந்துஷ் என்று அழைக்கப்படும் ஆயில் புல்லிங், முகத்தில் ஒரு பொலிவைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், கோடுகள் மற்றும் சுருக்கங்களை மேம்படுத்துகிறது. தோலை டோன் செய்கிறது மற்றும் முகப்பருக்களுக்கும் உதவுகிறது. இந்த ஆயில் புல்லிங்கினால், காது, மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிகளை சுத்தம் செய்யும் போது, வாய் அல்லது பற்களில் ஏற்படும் கோளாறுகள் நீங்குகிறது. ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் தீக்ஷா பவ்ஸரின் கூற்றுப்படி, நாக்கு, உடலில் இருந்து நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை நீக்குகிறது. "உங்கள் வாயில் எண்ணெயை கொப்பளிக்கும்போது, எண்ணெயில் உள்ள கொழுப்புகள், இயற்கையாகவே உங்கள் பற்கள், ஈறுகள் மற்றும் உமிழ்நீர் சுரப்பிகளில் இருந்து இந்த தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றுகின்றன" என்று கூறுகிறார்.