சரும பராமரிப்பு குறிப்புக்கள்: பொலிவான சருமம் பெற, வாழ்க்கை முறையை மாற்றுங்கள்
சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என்பதை விரும்பாதவர்களே கிடையாது. சருமம் நமக்கு கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாப்பதோடு, உடல் வெப்பநிலையையும் ஒழுங்குபடுத்துகிறது. ஆனால், அடிக்கடி ஏற்படும் அல்லது தொடர் மன அழுத்தம், மாசுபாடு போன்றவைகள் நம் சருமத்தில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. பருக்கள், சரும வறட்சி, முக பொலிவின்மை போன்றவைகளை சருமத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் ஆகயம். தோல் பராமரிப்பு பொருட்கள் ஓரளவுக்கு பொலிவான, மாசு மங்கற்ற சருமம் பெற உதவக்கூடும் என்றாலும், சில வாழ்க்கை முறை பழக்கங்களை மாற்றுவதே இதற்கு சிறந்த வழியாகும். உங்கள் வாழ்க்கை முறையின் சில மாற்றங்களை செய்வதன் மூலம் உங்கள் சருமத்தை எப்போதுமே பொலிவாகவும், ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
சரும பொலிவினை பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
நிறைய தண்ணீர் குடியுங்கள். ஏனெனில் நீங்கள் தண்ணீர் குடிக்கும்போது மேற்புற சருமத்தில் மட்டுமல்லாமல், உட்புற தோல் லேயர்கள், உறுப்புகளுக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும், . நாள் முழுவதும் அவ்வபோது தண்ணீர் குடிப்பது தோல் வறட்சியைக் குறைக்க உதவும். தினசரி போதுமான நேரம் தூங்க வேண்டும். நன்றாக தூங்கும்போது கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது, கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களைக் குறைத்து, சருமத்தை மிருதுவாக மாற்றுகிறது. அதிக எண்ணெய் இல்லாத உணவுகளை சாப்பிடுவது, முகப்பருக்களை குறைப்பதற்கும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகளான வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் கொட்டைகள் போன்றவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. வைட்டமின் சி மற்றும் ஏ, சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்க உதவுக்கிறது.