அடுத்த செய்திக் கட்டுரை

லப்பர் பந்து: முதல் முறையாக 'அட்டகத்தி' தினேஷுடன் இணையும் ஹரீஷ் கல்யாண்
எழுதியவர்
Venkatalakshmi V
Mar 03, 2023
07:08 pm
செய்தி முன்னோட்டம்
'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஹரிஷ் கல்யாண். அதன் பின்னர், அவர் நடித்த 'பொறியாளன்' படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர், 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார். அதன் பின்னர், அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
தற்போது, டீசல், தோனி தயாரிப்பில், 'LGM' ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், தற்போது 'அட்டகத்தி' தினேஷுடன், 'லப்பர் பந்து' படத்தில் இணைகிறார்.
இந்த படம் ஸ்ட்ரீட் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படம் எனக்கூறப்படுகிறது.
தமிழரசன் பச்சைமுத்து என்கிற புதுமுகம், இப்படத்தை இயக்குகிறார். இவர் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தின் வசனகர்த்தா ஆவர்.
மேலும் இந்த படத்தில், 'வதந்தி' புகழ் சஞ்சனா நாயகியாக நடிக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
'லப்பர் பந்து' போஸ்டர்
@dineshmoffl @itshravanthi @johnmediamanagr @TheMugDigital
— Harish Kalyan (@iamharishkalyan) March 3, 2023