
2023ல், பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி, பின்னர் பல மாற்றங்களை சந்தித்த திரைப்படங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்த 2023-ஆம் ஆண்டு, தமிழ் திரையுலகில் பல பிரமாண்ட படங்கள் வெளிவர காத்திருக்கிறது. அதே வேளையில், பல புதுப்படங்கள், எதிர்பார்ப்பை கிளப்பும் வகையில் அறிவிக்கப்பட்டன. பின்னர், ஏனோ பல காரணங்களால், நிறைய மாற்றங்களை சந்தித்தது.
அப்படி, எதிர்பாரா மாற்றங்களை சந்தித்த படங்களின் பட்டியல் இதோ:
ரஜினிகாந்த்: 'ஜெயிலர்' படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் 'டான்' இயக்குனர் சிபி சக்ரவர்த்தியுடன் கைகோர்க்கவுள்ளதாக கூறப்பட்டது. அதை இயக்குனரும் கிட்டத்தட்ட உறுதிசெய்தார். ரஜினிகாந்திற்கு சிறந்த ஸ்கிரிப்டை உருவாக்கி வருவதாகவும், அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தும் படத்தை விரைவில் எடுக்கப்போவதாகவும் சிபி கூறியிருந்தார். ஆனால் சென்ற வாரம், லைகா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 'தலைவர் 171' படத்தை, டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார்.
சூர்யா: இயக்குனர் பாலாவுடன் இணைந்து 'வணங்கான்' என்ற படத்தை அறிவித்திருந்தனர்.
தமிழ் திரைப்படங்கள்
சூர்யா இடத்தில் அருண் விஜய்!
ஆனால், சூர்யாவுக்கும், பாலாவிற்கும் இடையேயான ஆக்கப்பூர்வமான கருத்து வேறுபாடு காரணமாக, சூர்யா அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர், சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் நடிக்க போவதாக செய்திகள் வெளியாயின. மறுபுறம் சூர்யா, இயக்குனர் சிவாவுடன், 'சூர்யா 42' படத்தின் நடித்து வருகிறார்.
சிம்பு: 'பத்து தல' படப்பிடிப்பின் போதே, கோகுல் கிருஷ்ணாவை வைத்து 'கொரோனா குமார்' படத்தின் அறிவிப்பு வெளியானது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது, பிரதீப் ரங்கநாதன் அதில் நடிக்க போகிறார் என பேச்சுக்கள் எழுந்துள்ளது. மறுபுறம் சிம்பு, தேசிங் பெரியசாமியுடன் தனது அடுத்த படத்தை துவங்கவுள்ளார்.