Page Loader
சாலிகிராமத்தில் இயங்கி வந்த டப்பிங் யூனியன் பில்ட்டிங்கிற்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி
ராதாரவி தலைமையில் இயங்கி வந்த டப்பிங் யூனியனுக்கு சீல்!

சாலிகிராமத்தில் இயங்கி வந்த டப்பிங் யூனியன் பில்ட்டிங்கிற்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 11, 2023
05:17 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை சாலிகிராமத்தில், நடிகர் ராதாரவி தலைமையில், தென்னிந்திய சினிமா, தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம் இயங்கி வந்தது. அந்த சங்கம், டத்தோ ராதாரவி வளாகம் என்று பெயர் கொண்ட கட்டடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்நிலையில், அந்த கட்டடம், அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, பலகட்ட விசாரணைகளும் நடைபெற்றது. ஆனால், சங்கத்தின் தரப்பிலோ, ராதாரவியின் தரப்பிலோ சரியான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை எனத்தெரிகிறது. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கையாக, அந்த வளாகத்திற்கு இன்று, (மார்ச் 11) சீல் வைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தான், இந்த சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. அதில் ராதாரவியின் தலைமையிலான அணி வென்று, தற்போது ராதாரவி தான் தலைமை பொறுப்பில் உள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

சீல் வைக்கப்பட்ட டப்பிங் யூனியன் வளாகம்