
இணையத்தில் வைரல் ஆகும் ராதாரவியின் புதிய கெட்அப்
செய்தி முன்னோட்டம்
பிரபல நடிகர் ராதாரவியின் புதிய கெட்அப் சமீபத்தில் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டது.
வித்தியாசமான தோற்றத்தில் இருந்த ராதாரவி, இந்த போட்டோஷூட்டிற்கு ஒத்துக்கொண்டதன் காரணம், அவரது பேத்தி என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
நடிகர் ராதாரவியின் பேத்தியான, பவித்ரா சதிஷ், திரைப்படத்துறையில் ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்து வருகிறார். பல முன்னணி நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
தன் தாத்தாவை 'மாடர்ன் லுக்'இல், பார்க்க வேண்டும் என்பது அவரது ஆசை எனவும், அதற்காக, தானே வடிவைமைத்த ஆடைகள் கொண்டு அந்த போட்டோஷூட் நடைபெற்றதெனவும் கூறப்படுகிறது.
வில்லன், குணசித்திர நடிகன், காமெடியன் என பன்முக நடிப்பை வெளிப்படுத்தும் ராதா ரவி, கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
ராதாரவியின் புதிய கெட்அப்
#styledbypavithrasathish What a privilege to be born as the grand daughter in the legendary family of Nadigavel MR Radha and it’s an honour to style my granddad Datho Radha Ravi. This is indeed a dream come true moment for me to be working along side with the legend #Radharavi pic.twitter.com/GJLbdnUJ5w
— pavithra sathish (@paviiiee_08) January 21, 2023