
'மிஸ் மேகி' டீஸர் வெளியீடு; வைரல் ஆகிறது யோகி பாபுவின் புதிய அவதாரம்
செய்தி முன்னோட்டம்
யோகி பாபு நடிப்பில் வெளிவர இருக்கும் 'மிஸ் மேகி' படத்தின் டைட்டில் டீஸர், நேற்று (ஜனவரி 17) வெளியானது. அதில், யோகி பாபு ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்மணி வேடத்தில் தோன்றியுள்ளார்.
அவரின் வித்தியாசமான கெட்டப் தற்போது வைரல் ஆகி வருகிறது.
லதா ஆர் மணியரசு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், 'மெஹந்தி சர்க்கஸ்' புகழ் மாதம்பட்டி டி.பி.ரங்கராஜ், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கார்த்திக் இசையமைத்துள்ளார்.
டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு, கார்த்திக் இசையமைக்கிறார்.
நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தாலும், அவ்வப்போது ஹீரோ அவதாரமும் எடுக்கிறார் யோகி பாபு.
அவர் ஹீரோவாக நடித்த கோலமாவு கோகிலா மற்றும் மண்டேலா போன்ற படங்கள் பெரும் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ட்விட்டர் அஞ்சல்
யோகி பாபுவின் புதிய அவதாரம்
Who is #MissMaggie?
— Muthaiya (@dir_muthaiya) January 15, 2023
Click the link to find the Gorgeous Granny!
▶️ https://t.co/8wqaNxTrIM
Surprising Firstlook cum Title Teaser #MissMaggie Movie@iYogiBabu @MadhampattyRR @DrumsticksProd @im_aathmika #LathaRManiyarasu @singer_karthik #GowthamRajendran @teamaimpr