Page Loader
ஒரே போன் காலில், ஒரு லட்சத்தை இழந்த நடிகை நக்மா
ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த நடிகை நக்மா

ஒரே போன் காலில், ஒரு லட்சத்தை இழந்த நடிகை நக்மா

எழுதியவர் Venkatalakshmi V
Mar 09, 2023
10:11 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் 90-களின் இறுதியிலும், 2000-களிலும் கோலோச்சியவர் நடிகை நக்மா. நடிகை ஜோதிகாவின் சகோதரியான நக்மா, தமிழ், தெலுங்கு என தென்னிந்தியா மொழிகளில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர். அதன் பின்னர், ஹிந்தி திரைப்படவுலகிற்கு சென்றவர், போஜ்புரி மொழி படங்களில் நடித்து வந்தார். அவர் சமீபத்தில், மோசடி கும்பல் ஒன்றிடம் சிக்கி கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை இழந்துள்ளார். இதை குறித்து, மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். நக்மாவிற்கு, சமீபத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த 'லிங்க்'கை நடிகை நக்மா 'கிளிக்' செய்தவுடன், மர்ம நபர் ஒருவர், நக்மாவை தொடர்பு கொண்டுள்ளார். மர்ம நபர், தன்னை ஒரு வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார்.

நடிகை நக்மா

மும்பையில் மோசடி கும்பல்

தொடர்ந்து, அவர் நக்மாவின் வங்கி கணக்கின் KYC (வாடிக்கையாளரின் விவரம்) தகவல்களை புதுப்பிக்க உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு பேசிக்கொண்டே, நக்மாவின் மொபைலை ஹேக் செய்துள்ளார் அந்த நபர். அப்படியே, நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.99,998-ஐ, வேறு ஒரு வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளார் அந்த மர்ம நபர். வங்கியிலிருந்து பணப்பரிமாற்றம் நடந்ததிற்க்கான குறுஞ்செய்தி வந்தபிறகுதான், நக்மா, தன்னை அழைத்தது ஒரு மோசடி நபர் என்று உணர்ந்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "லிங்கில் கேட்கப்பட்டு இருந்த விவரங்கள் எதுவும் நான் பகிரவில்லை. இருப்பினும், எதிர்முனையில் பேசிய நபர், கே.ஒய்.சி.யை புதுப்பித்து தருவதாக பேசிக்கொண்டே, எனது இன்டர்நெட் பேங்கிங் மூலம், வேறொரு வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றி உள்ளார்" எனத்தெரிவித்தார்.