
வெங்கட் பிரபு- நாக சைதன்யா 'கஸ்டடி' படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் ஒருசேர தயாராகி இருக்கும் 'கஸ்டடி' திரைப்படம், மே 12 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.
தற்போது படத்தின் டீஸர் என்று வெளியாகும் என்பதை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, நாளை மாலை 4 :51 மணிக்கு டீஸர் வெளியாகிறது.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையே வெங்கட் பிரபு ஸ்டைலில் அறிவித்த படக்குழுவினர், படத்தின் டீசரில் என்ன வித்தியாசமாக வைத்திருப்பார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
இந்த படத்தில், நடிகை கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், அரவிந்த் சாமி, சரத் குமார் மற்றும் ப்ரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு இசை, இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும்.
ட்விட்டர் அஞ்சல்
'கஸ்டடி' டீஸர் அறிவிப்பு
Tomorrow 4:51pm #CustodyTeaser #CustodyOnMay12 #custody #aVPhunt #vp11 pic.twitter.com/SdbwLXnL2g
— venkat prabhu (@vp_offl) March 15, 2023