Page Loader
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது
'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2023
09:22 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன்(பிப்.,24) முடிவடைந்தது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம், வரும் மே 12, 2023 அன்று திரைக்கு வரும் எனவும் படக்குழு அறிவித்தது. இந்த படத்தை, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிக்கிறது. இந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக 'புல்லட்' க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். இவருடன் இந்த படத்தில், பிரியாமணி, அரவிந்த் சாமி, ராம்கி, சம்பத் ராஜ், சரத்குமார், பிரேம்ஜி, மற்றும் பலர் நடித்துள்ளனர். அரவிந்த் சாமிக்கு இந்த படத்தில் வில்லன் வேடம் எனக்கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இசையமைக்கவுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

'கஸ்டடி' படப்பிடிப்பு நிறைவடைந்தது