
பர்ஸ்ட் லுக் போஸ்டர்: 'கஸ்டடி' படத்தில் கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரத்தை வெளியிட்ட படக்குழு
செய்தி முன்னோட்டம்
வெங்கட் பிரபு, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை ஹீரோவாக வைத்து 'கஸ்டடி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் க்லிம்ப்ஸ் (Glimpse) வீடியோ சமீபத்தில் வெளியானது.
பெரும் வரவேற்பை பெற்ற அந்த வீடியோவில், படத்தில் சைதன்யாவிற்கு போலீஸ் வேடம் என்பது போல காட்டப்பட்டது.
அப்படத்தில், அவருக்கு ஜோடியாக 'புல்லட்' பட புகழ் கீர்த்தி ஷெட்டி நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.
தற்போது, அவரின் கதாபாத்திரத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், கதாபாத்திரத்தின் பெயரையும் வெளியிட்டுள்ளனர்.
'ரேவதி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கீர்த்தி.
இந்த படம் இந்தாண்டு மே 12 -ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இப்படத்தில், அரவிந்த் சுவாமி, சரத்குமார், ப்ரியாமணி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Introducing our Charming and Gorgeous @IamKrithiShetty as the Resilient #Revathi🔥 from #Custody ❤️🔥
— Srinivasaa Silver Screen (@SS_Screens) January 18, 2023
A @vp_offl HUNT💥#CustodyOnMay12@chay_akkineni @thearvindswami @ilaiyaraaja @thisisysr @srinivasaaoffl @realsarathkumar #Priyamani #SampathRaj @SS_Screens @jungleemusicSTH pic.twitter.com/5N96cMCshc