ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் 'இறைவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணையும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு இருவரும் இணையும் இந்த படத்தை, ஐ.அஹ்மத் இயக்குகிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் முடிவடைந்தன என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். படம் வெளி வரும் முன்னரே, இப்படத்தின் OTT உரிமையை நெட்ஃபிலிக்ஸ் தளம் வாங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு, ஜெயம் ரவியின் அடுத்த வெளியீடு, இப்படம் தான். திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா கலந்து கொண்ட முதல் படம் இது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.