
ஹிப்ஹாப் தமிழாவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
ஹிப்ஹாப் தமிழாவின் அடுத்த படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
'பிடி சார்' என்று தலைப்பிட்டுள்ள அந்த திரைப்படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
இந்த படத்தை, 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' புகழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார்.
இப்படத்தில் காஷ்மீரா பண்டிட் கதாநாயகியாக நடிக்கிறார். இவர், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் முந்தைய படமான, 'அன்பறிவு'-லும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த படத்தின் கதை, பள்ளிக் குழந்தைகளுக்கு, தனித்துவமான உடற்கல்வியை அறிமுகப்படுத்த முயற்சிக்கும், ஒரு இளம் ஆசிரியரை பற்றியது, என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படத்திற்கு, ஆதியே இசையமைப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஹிப்ஹாப் தமிழாவின் PT Sir போஸ்டர்
Here is an exciting First look of @VelsFilmIntl 's #HHT7 titled as #PTsir starring Music by @hiphoptamizha ! #PTsirFirstLook
— Vels Film International (@VelsFilmIntl) January 12, 2023
Dir by @karthikvenu10
Prod by @IshariKGanesh @kashmira_9 @editor_prasanna @madheshmanickam@Ashkum19 @swapnaareddy @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/rBHPNcjd6Y