Page Loader
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் துணிவு படத்தின் புதிய போஸ்டர்கள்
துணிவு படத்தின் போஸ்டர்

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் துணிவு படத்தின் புதிய போஸ்டர்கள்

எழுதியவர் Saranya Shankar
Dec 31, 2022
06:31 pm

செய்தி முன்னோட்டம்

அஜித் குமாரின் அடுத்த படமான துணிவு வருகிற பொங்கல் தினத்தையொட்டி 2023-ஆம் ஆண்டு ஜனவரி 11ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தை H.வினோத் இயக்கி, போனி கபூர் தயாரித்துள்ளார். இயக்குனர் H.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் வெளிவரும் மூன்றாவது படம் இதுவாகும். ரசிகர் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ள இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திர கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில நடித்துள்ளனர். அஜித்தின் 61வது படமாக வெளிவர இருக்கும் இந்த படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் தமிழ் நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

துணிவு படத்தின் அப்டேட்

தொடர்ந்து வெளியாகும் துணிவு படத்தின் அப்டேட்கள்

இப்படத்தில் முதல் படலாக சில்லா சில்லா பாடல் வெளிவந்தது. அனிருத் பாடிய இந்த பாடல் கடந்த டிசம்பர் 9-ந்தேதி வெளியானது. அதன் பிறகு காசே தான் கடவுளப்பா மற்றும் கேங்ஸ்டா போன்ற பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகின. இந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து துணிவு படக்குழு தொடர்ந்து போஸ்டர்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறது. இப்படத்தில் நடிகர் பிரேம் அவர்கள் பிரேம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்தாக பேச்சாளர் மோகன சுந்தரம் மைபா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் பக்ஸ் ராஜேஷ் கதாபாத்திரத்திலும், ஜான் கொக்கன் க்ரிஷ் கதாபாத்திரத்திலும் நடிப்பதாக போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. இந்த அப்டேட்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

துணிவு படத்தின் புதிய போஸ்டர்கள்