Page Loader
இளம் நடிகருடன் திருமணமா? மனம் திறந்த நடிகை மீனா

இளம் நடிகருடன் திருமணமா? மனம் திறந்த நடிகை மீனா

எழுதியவர் Venkatalakshmi V
Mar 23, 2023
03:02 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், சென்ற ஆண்டு எதிர்பாராதவிதமாக இறந்து போனார். அவரது திடீர் மரணம், மீனாவிற்கும், அவர் குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல, திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், நடிகை மீனா,நடிகர் தனுஷை இரண்டாவது திருமணம் செய்யவிருப்பதாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் கூறினார். அது குறித்து தற்போது மீனா, தன்னிலை விளக்கம் தந்துள்ளார். அதில் அவர் கூறியது, "என்னுடைய கணவர் இல்லை என்பதையே இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்குள் எப்படி இப்படிப்பட்ட செய்திகள் வெளியாகிறது என்பது என்னால் தற்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை. தற்போதைக்கு நல்ல கதைகள் அமைந்தால், திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்துவேன். அதேபோல் எனது மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவதே, எனக்கு மிகவும் முக்கியம்." எனக்கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

மீனா திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறிய சர்ச்சையான கருத்து