பொன்னியின் செல்வன் அப்டேட், படத்தின் ஸ்பாய்லரான மொமெண்ட்!
செய்தி முன்னோட்டம்
பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த பாகத்திற்கான அப்டேட் நேற்று,(மார்ச்-17) மாலை வெளியானது. அதன்படி, அடுத்த வாரம், (மார்ச்-20) படத்தின் முதல் பாடலான 'அகநக' வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது.
இதை அவர்கள் ஒரு போஸ்டருடன் அறிவித்து இருந்தனர். தற்போது அந்த செய்தியை போல, போஸ்டரும் வைரலாக பரவி வருகிறது. சிலர், அதில் இடம்பெற்றிருக்கும் இளையபிராட்டியின் (திரிஷா) கம்பீரத்தையும், வந்தியத்தேவனின் அழகையும் கண்டு பிரமித்திருக்கும் வேளையில், ஒரு சிலரோ, இதோ படத்தின் ஸ்பாய்லர் என எதிர்மறை விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முதல் பாகத்தில், வந்தியதேவனும், அருள்மொழிவர்மனும் கடலுக்குள் மூழ்கியதுடன் படம் நிறைவுறும். இந்த போஸ்டரில் வந்தியத்தேவன் உயிருடன் இருப்பதை வெளிப்படுத்தி, படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்து விட்டனர் என சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
எதிர்மறை விமர்சனங்கள்
PS doesn't have silly spoilers like this. The story is very deep. That's why some audience got confused and complained it's boring.
— Abilaash17 (@abilaashvijey) March 17, 2023
ட்விட்டர் அஞ்சல்
எதிர்மறை விமர்சனங்கள்
"Only Those who read that book will understand bro"
— Alone mask (@______00101) March 17, 2023
ட்விட்டர் அஞ்சல்
எதிர்மறை விமர்சனங்கள்
Vandiyadevan is alive?!?! 🤯
— Ram Venkat Srikar (@RamVenkatSrikar) March 17, 2023
PS2's posters are giving away major spoilers! pic.twitter.com/VNKaTbfOxa
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் ரசிகர்களின் கருத்து
மறுபுறம், பொன்னியின் செல்வன் ரசிகர்கள், இந்த பாடல், படத்தின் எந்த சிச்சுவேஷனில் இடம் பிடிக்கும் என யூகித்து வருகின்றனர்.
சிலர் சுஹாசினி மணி ரத்தினத்தின் பழைய நேர்காணல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், சுஹாசினி, "பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில், குந்தவையும், வந்தியத்தேவனும் சந்திக்கும் ஒரு காதல் காட்சி ஒன்று உள்ளது. மணிரத்னம் இயக்கத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த, அழகான காதல் காட்சி அது" எனக்கூறியுள்ளார்.
அவரின் கூற்றுப்படியும், கதைப்படியும் இருவரும், நாகப்பட்டினத்தில் இருக்கும் சூடாமணி விஹாரத்தில் சந்திக்கும் பொழுது இந்த பாட்டு இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
பொன்னியின் செல்வன் குறித்து சுஹாசினி
"The love scene which I liked the most from #ManiRatnam movies is the romantic meeting between Vandhiyathevan and Kundhavai in #PonniyinSelvan2 #PS2 It is a lovely scene and I enjoyed it very much." says @hasinimani 🫶#Karthi #TrishaKrishnan #AgaNaga on Mar 20. 6PM#ARRahman pic.twitter.com/6CuliPzSK6
— @ponniyinselvan_movie (@PS_FANS_CLUB) March 18, 2023