'தளபதி 67' முதல் 'பொன்னியின் செல்வன் II' வரை: அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் திரிஷாவின் திரைப்படங்கள்
செய்தி முன்னோட்டம்
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. அவர் சமீபகாலமாக தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
சமீபமாக, 'தளபதி 67 ' நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, அவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் மற்ற திரைப்படங்களை பற்றி ஒரு சிறு தொகுப்பு:
தளபதி 67: 14 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜயுடன் இணையும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புள்ளது. படத்தை இயக்குபவர் லோகேஷ் கனகராஜ்.
பொன்னியின் செல்வன்II: கல்கியின் காவியமான 'பொன்னியின் செல்வனை' வெள்ளித்திரைக்கு கொண்டு வரும் முயற்சியாக மணிரத்னம் எடுத்த இந்த படத்தின் முதல் பாகம், ஏற்கனவே மிக பெரிய வெற்றியை கண்டது. தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ல் வெளிவரவிருக்கிறது.
திரிஷா
ஜீத்து ஜோசப்பின் மலையாள படத்தில் நடிக்கும் திரிஷா
'த்வித்வா': கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் முடிக்கப்படாத படங்களில் பவன் குமாரின் 'த்வித்வா'வும் ஒன்று. அவரின் அகால மரணத்தால், த்வித்வாவின் படவேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தற்போது, புனீத் வேடத்தில், பஹத் பாசில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
'தி ரோடு': அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அறிவிப்பை, சென்ற ஆண்டு திரிஷாவின் பிறந்தநாளன்று வெளியிட்டனர். இப்படத்தில், விவேக் பிரசன்னா, மியா ஜார்ஜ் மற்றும் சபீர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஊடக செய்திகளின் படி, இது ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படம்.
'ராம்': ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த மலையாள படத்தில், மோகன்லால், இந்திரஜித் சுகுமாரன், சம்யுக்தா மேனன் ஆகியோரும் நடிக்கின்றனர்