வெளியான கொஞ்ச நேரத்திலேயே லைக்குகளை அள்ளும் கஸ்டடி படத்தின் டீஸர்
பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பிய வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை வெளியானது. நாக சைதன்யா நடிப்பில் மே 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படம், தமிழ்-தெலுங்கு என இருமொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில், நடிகை கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், அரவிந்த் சாமி, சரத் குமார் மற்றும் ப்ரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்று வெளியான டீஸர் தற்போது வைரலாகி வருகிறது. அதில், அரவிந்த் சுவாமி, நாகசைதன்யாவுடன் மோதும் காட்சிகளும் இடம் பிடித்துள்ளன. யுவன் ஷங்கர்ராஜாவும், இசைஞானி இளையராஜாவும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் முடிவடைந்தது என அறிவிக்கப்பட்டது.