Page Loader
அதிதி ஷங்கரின் அடுத்த படத்தின் நாயகன் இவரா?
புதுமுக நடிகருடன் இணையும் அதிதி ஷங்கர்

அதிதி ஷங்கரின் அடுத்த படத்தின் நாயகன் இவரா?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 20, 2023
12:36 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், விருமான் படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார் என அறிந்திருப்பீர்கள். அவர் தற்போது, சிவகார்த்திகேயனுடன், மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு, பாண்டிச்சேரியில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், அதிதி ஷங்கரின் அடுத்த படத்தை பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன. நடிகர் அதர்வாவின் தம்பியும், மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனுமான, ஆகாஷ் முரளி, அறிமுகம் ஆகும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க போகிறாராம் அதிதி ஷங்கர். இந்த படத்தை இயக்க போவது, பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பது, 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளரான, சேவியர் பிரிட்டோ.

ட்விட்டர் அஞ்சல்

ஆகாஷ் முரளியுடன் ஜோடி போடும் அதிதி ஷங்கர்